இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தயாரித்து, தொகுத்து வழங்கியவர் மஞ்சு சிங். இவர் குழந்தைகள் நிகழ்ச்சியான khel khilone எனும் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் ரசிகர்களால் திதி எனவும் அழைக்கப்படும் வந்தார் தனது நிகழ்ச்சிகளின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி வந்தார்.
இந்த நிலையில் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட மஞ்சு சிங் வியாழக்கிழமை காலை காலமானார். மஞ்சு சிங் காலமானதை அவரது மூத்த மகளான சுபர்னா உறுதிப்படுத்தியிருக்கிறார். மஞ்சு சிங்கின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது. நியூயார்க்கில் உள்ள அவருடைய பேத்திக்காக குடும்பத்தினர் காத்திருப்பதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். மஞ்சு சிங்கின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.