கோயில் ஒன்றை புணரமைப்பதாக கூறி பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக பிரபல யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி மக்களிடம் ரூ.50 லட்சத்துக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பிரபல யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.