தஞ்சை மேல் அரங்கத்தில் பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தையை குரங்கு தூக்கிச் சென்று அகழியில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் மேல் அரங்கம் என்ற பகுதியில் ராஜா என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரின் மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் மிகவும் ஏழையான குடும்பம். ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வது, சாலையில் செல்பவர்களை தாக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
அதன்படி ராஜா என்பவரின் குழந்தையை குரங்கு ஒன்று தாக்கி சென்று அகழியில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த குழந்தையை அந்த குரங்கு ஓட்டைப் பிரித்து தூக்கிச் சென்று உள்ளது. குழந்தையைத் தூக்கிய குரங்கை பொதுமக்கள் துரத்தி சென்றனர். அப்போது அந்த குரங்கு உடனே குழந்தையை கீழே போட்டு உள்ளது. அதனால் அகழிக்குள் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்குகளின் அட்டகாசத்தை அடக்க அரசு ஏதாவது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.