Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மன அழுத்தம், ரத்த அழுத்தம்  என பல்வேறு உடல்நல குறைவு காரணமாக மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்ட நிலையில் மேலும் 30 நாட்கள் விடுப்பு கொடுத்தார். இந்நிலையில் பேரறிவாளன் சிறுநீரக சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |