திருவனந்தபுரம், கேரள மாநிலம்,கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு குளத்துப்புழா-மடத்தாரா சாலையில் அரசு பேருந்து மீது சுற்றுலா பேருந்துமோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 57 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லேசான காயம் அடைந்த 15 பேர் கடக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காயம் அடைந்தவர்களை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் மருத்துவமனையில் சென்று சந்தித்தார்.