தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கும் காரணமாக கொரோனா சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில்மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை ,குண்டாறு பகுதிகளில் தனியார் நீர்வீழ்ச்சிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனியார் நீர்வீழ்ச்சிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் தனியார் நீர்வீழ்ச்சிகளை ஆய்வு செய்ய வட்டாட்சியருக்கு ஆணையிட்டுள்ளார்.