Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: மக்களே உஷார்… மருத்துவமனையில் கவலைக்கிடம்… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்துவிட்டு சிகரெட் பற்ற வைத்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ரூபன் என்பவர் சனிடைசரால் கைகளை சுத்தம் செய்துவிட்டு சிகரெட் பற்ற வைத்தால் தீயில் கருகி ஆபத்தான நிலையில் உள்ளார். இரவு வீட்டின் கழிவறைக்கு சென்ற ரூபன் சனிடைசர் மூலம் கையை துடைத்து விட்டு அதன் பிறகு சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அப்போது தீ அவரது கையில் பற்றி சட்டையில் முழுவதுமாக பரவியது.

அதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவர் மீது கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பொதுமக்களை சானிடைசர் பயன்படுத்தும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |