14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் மார்ச்,28 29 ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்தத்துறை எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி மார்ச் 28,29-ல் எந்தவிதமான விடுப்பும் அனுமதிக்கப்படமாட்டாது. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.