Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS: மாணிக்க விநாயகம் உடல் தகனம்…!!!!

மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். இவர் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (73) இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் நேற்று காலமானார்.

இந்நிலையில் இவருடைய உடலுக்கு தலைவர்கள், ரசிகர்கள் என பலரும்  அஞ்சலி செலுத்திய நிலையில் உடல் சென்னை கோட்டூர்புரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |