தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்.
அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும். முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர்கல்விக்கான மாதம் 1000 ஊக்கத் தொகை பெறும் மாணவர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் ஆயிரம் ஊக்கத் தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்களை https://studentsrepo.tn, https://schools.gov.in ஆகிய இணையதளங்களில் காணலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.