நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அனைவருக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.
வதந்திகள் வேதனை அளிக்கிறது. யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் .அவர் நலமுடன் இருக்கிறார். நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.