Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மாவட்டங்களுக்கு மீண்டும் இ-பாஸ் – சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.  இதனால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதில் இ-பாஸ் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்தில் இருந்து நீலகிரி சென்றாலும் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் இ-பாஸுடன் பரிசோதனை சான்றிதழும் கட்டாயம் இல்லை என்றால் எல்லைகளில் சோதனை சாவடிகளில் அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது.

Categories

Tech |