இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் ஜூனியர் காலமானார்.
இந்திய ஹாக்கி அணி முன்னாள் பல்பீர் சிங் ஜூனியர். இவருக்கு வயது 88. இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தூக்கத்தில் இருந்த போதே உயிரிழந்தார். 1958இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடினார். பஞ்சாப் பல்கலை அணியை வழிநடத்திய இவர் உள்ளூர் போட்டியில் பஞ்சாப், ரயில்வே, சர்வீஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 1962இல் ராணுவத்தில் இணைந்த இவர் 1984 இல் ஓய்வு பெற்றார்.