பிரபல டப்பிங் கலைஞர் கண்டசாலா ரத்னகுமார் மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பிடித்தவர். கடந்த 40 வருடங்களாக தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் 1500 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியுள்ளார். அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories