Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: முதல்வர் திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக பெங்களூரு ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்தபோது எடியூரப்பாவுக்கு நெகட்டிவ் என வந்தது. ஆனால் அவருக்கு தொடர்ந்து 2 நாட்களாக காய்ச்சல் குறையாததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |