Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: ரேஷன் அட்டைதாரர்களே திங்கள் முதல் ரூ.2000…!!!

நேற்று நடந்த பதவியேற்பு விழாவையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். இதையடுத்து 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும். மக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய துறை ஏற்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். மேலும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்தார். அதன் முதல் தவணையாக இந்த  மாத இறுதிக்குள் ரூ.2000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் மே-10 ஆம் தேதி முதல் ரூ.2000 வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

 

Categories

Tech |