பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 22 முதல் டெபிட் கார்டு ஷில்டு செயலியைப் பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக மொபைல் பேங்கிங் செயலியை ஏப்ரல் 21-க்குள் புதுப்பித்து மேற்கொண்ட சேவையை பெறலாம் என வங்கி அறிவித்துள்ளது. மேலும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் இந்த சேவையை பெறலாம்.