No Parking-ல் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை உரிமையாளருடன் சேர்த்து கிரேனில் போக்குவரத்து காவல்துறையினர் தூக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாக்பூரின் அன்ஜுமன் காம்ப்ளக்ஸ் பகுதியில் நோ பார்க்கிங் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார். இதைக்கண்ட போலீசார், இளைஞருடன் சேர்த்து வாகனத்தை கிரேனில் தூக்கினர். போலீசின் இந்த செயல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
Categories