ஜூன் 14-ம் தேதி தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்குப் பின் நலமுடன் இருப்பதாகவும் இன்று தகவல் வெளியாகியுள்ளது.