தேமுதிக தலைவரான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நீரிழிவு பிரச்சனையால் விஜயகாந்தின் வலது கால் விரலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் விரல்கள் அகற்றப்பட்டன. தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமாக உள்ளார்.அவரின் உடல் நிலை குறித்து பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைமை குறிப்பிட்டுள்ளது.
Categories