இலங்கையில் நடப்பு மாதத்திலிருந்து 22 ஆயிரத்து 900 கோடிக்கு பொருளாதார ஊக்க சலுகை திட்டம் அமலுக்கு வருவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறை மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. ஆகையினால் இலங்கையில் விவசாயம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் நிதி அமைச்சரான பசில் விவசாயிகளின் மகசூலை சந்தை விலையில் இருந்து அதிகமான மதிப்பீட்டு தொகைக்கு தாங்கள் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி நடப்பு மாதத்திலிருந்து 22 ஆயிரத்து 900 கோடிக்கு பொருளாதார ஊக்கத்தொகை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊக்கத்தொகை திட்டத்தின்படி ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் இலங்கை விவசாயிகளுக்கு மானியமாக ரூபாய் 10,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாதம் ரூபாய் 5,000 சிறப்பு ஊக்கத் தொகையாக 15 லட்சம் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.