Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: வெளி மாநிலத்தவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு மீண்டும் இ-பாஸ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு மீண்டும் இ-பாஸ் சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் அதிகமாக வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |