நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லெப்டினன்ட் ஜெனரல் அருண், கிராம மக்களுக்கு ஹெலிகாப்டர் விபத்தில் உதவியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குரூப் கேப்டன் வருண் சிங்க் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார். இதையடுத்து விபத்தை முதலில் பார்த்தவருக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.