தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. அதிலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17ஆம் தேதியும் ,பன்னிரண்டாம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதில் கடுமை கூடாது என விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்களை தாராளமாக வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.