ஓடிடியில் வன்முறை, ஆபாச மற்றும் பாலினம் அடிப்படையில் படங்களை வகைப்படுத்த தணிக்கைச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் உலா வருவது வழக்கம். ஆனால் அதனை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
ஓடிடியில் 13+, 16+, Adult என திரைப்படங்களை வகைப்படுத்தி தணிக்கைச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வன்முறை, ஆபாசம், மொழி மற்றும் பாலினம் அடிப்படையில் ஓடிடியில் படங்களை வகைப்படுத்த வேண்டும். அரசு நீதிமன்றம் கேட்கும் தகவல்களை சமூக வலைத்தளம் தராவிட்டால் 5 ஆண்டுகள் சிறை அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும். சமூக வலைத்தளங்களை அவதூறுகள் மற்றும் வதந்திகளை பரப்புவதற்காக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.