நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவிலும் ஊரடங்கினால் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 12.1 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் 50% கேரளாவில் மட்டுமே ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழகம் திரும்ப மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.