வேலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூரில் வருகின்ற 25 மற்றும் மே 1 ஆம் தேதி அன்று டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 25 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1 ஆம் தேதி மே தினம் ஆகியவற்றை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூடி இருக்க வேண்டும். அவ்வாறு உத்தரவை மீறி விற்பனை செய்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளார்.