நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.
ஆனால் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆழ்ந்த துயரத்திற்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் நிலையை நினைக்கும் போது கண்ணீர் தான் வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கான வழிகாட்டு முறைகளை மகளிர் குழந்தைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் பெற்றோரை இழக்கும் குழந்தைகளை வேறு யாரும் பராமரிக்க இல்லை என்றால் 24 மணி நேரத்தில் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.