Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: 4 Innova கார்கள் பரிசு – தடாலடி அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது.

இந்நிலையில் நேற்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றதால், அந்த 4 மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு வழங்கப்படஉள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக வளர்ந்துவிட்டதாகவும் பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |