தமிழகம் முழுவதும் நாளை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிகள் நாளை திறந்த உடனே தாமதமின்றி டிசி வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 5,8,10,12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தாமதமில்லாமல் டிசி வழங்க வேண்டும்.
இதர வகுப்பு மாணவர்கள் டிசி கேட்டாலும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் எட்டாம் வகுப்பு வரை புதிதாக சேரும் மாணவர்களிடம் பேசி இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.