கோவை மாவட்டம், கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த கவுரிஉதயேந்திரன் என்பவரின் மனைவி விப்ரஜா. அவரது மகள் பிரகதி. இவருக்கு வயது எட்டு. இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனது மூன்று வயது முதலே சிலம்பம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்ட சிறுமி தற்போது தேசிய அளவில் சிலம்பம், இரட்டை சுருள், வாள் வீச்சு, கம்புச் சண்டை, கம்பு ஜோடி என பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி என்று பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
பல சாதனைகள் புரிந்த சிறுமியை கௌரவிக்கும் விதமாக சர்வதேச யுனிசெப் கவுன்சில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச யுனிசெப் கவுன்சிலின் தூதர் டாக்டர் வாலண்டினா பேட்ரிஸ் சிறுமி பிரகதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். தமிழகத்தை சேர்ந்த 8 வயது சிறுமி டாக்டர் பட்டம் பெறுவது மிகவும் பெருமையாக இருந்தது. இவருக்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.