தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணியை விரைவாக செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையமும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகளில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் தொகுதி பங்கீடுவதில் பிரச்சினையும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் திமுக உடனான கூட்டணி வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அறிவு அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.