Categories
தேசிய செய்திகள்

Flash News: ATM-ல் பணம் இனி, மீறினால் அபராதம்… அதிரடி உத்தரவு….!!!

ஏடிஎம்களில் குறைந்தபட்ச பணம் இருப்பு இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் ஏடிஎம்மில் 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றது. ஏடிஎம்களில் பணம் இல்லை என அடிக்கடி வரும் புகாரை தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஏடிஎம் இயந்திரங்களில் சரியாக பணத்தை நிரப்பவில்லை என்றால் வங்கிகளுக்கும், வொயிட் லேபிள் ஏடிஎம் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Categories

Tech |