2020 தமிழ் திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் அஜித் மற்றும் தனுஷ் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருடந்தோறும் சிறந்த படங்கள், சிறந்த நடிகர் நடிகைகளுக்கான தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய தாதாசாகிப் பால்கே திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு விருது (most versatile actor) அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகராக தனுஷ் (அசுரன்), சிறந்த நடிகையாக ஜோதிகா (ராட்சசி), சிறந்த இயக்குனராக பார்த்திபன் (ஒத்த செருப்பு), சிறந்த இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த திரைப்படமாக டூலெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.