மத்திய அரசு ஒதுக்கியுள்ள அரிசி ஜூன் மாதத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு கூடுதலாக வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி இருந்தது.
மேலும் மத்திய அரசும் அரிசி அட்டைதாரர்களுக்கு கூடுதலாக அரிசி விநியோகம் செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி மொத்தமாக விநியோகிக்கப்படும் அரிசி விவரம் ரேஷன் கடை விளம்பரப் பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தேவைக்கேற்ப, புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.