Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: தனி நீதிபதி கோரிக்கை ஏற்க முடியாது.. பாயிண்ட் புடிச்ச ஈபிஎஸ்.. கோர்ட்டில் அனல்பறக்கும் விவாதம் …!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எட்டாப்படி தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உய்ரநீதிமன்றத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய வாதத்தை தொடங்கியுள்ளார். அதில், 1.50 கோடி உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற வாதம் எங்கேயும் முன் வைக்கப்படவில்லை.பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்த ஜூன் 23 க்கு பிறகு எந்த பொதுக்குழு உறுப்பினரும் கையெழுத்து இட வில்லை.

2539 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வேண்டுமென ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு அரசியல் கட்சி ஒவ்வொரு இடமும் சென்று வாக்கெடுப்பு நடத்த முடியாது. ஓபிஎஸ் என்ற தனிநபர் பலனடையும் வகையிலேயே தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு உள்ளது.

கட்சி விவகாரத்தில் பொதுக்குழுவின் முடிவே இறுதியானது, இதுதான் கட்சியின் விதி, இதை மீறி பயணிக்க முடியாது.ஜூன் 23 க்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என்ற உத்தரவால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் செயல்பட முடியாத நிலை, தொண்டர்கள் எண்ணத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலிப்பதாக கூறுவதை எப்படி ஏற்பது என்ற தனி நீதிபதியின் கருத்தை ஏற்க முடியாது

ஓபிஎஸ் பலனடையும் வகையிலேயே தீர்ப்பு.

தனி நீதிபதியின் தீர்ப்பு பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ளது. தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு ஒன்றை கோடி அதிமுக தொண்டர்கள் பயனடையும் வகையில் இல்லை. கட்சியின் கட்சியின் பொதுக்குழு உச்சபட்ச அமைப்பு என்பதால் 1.50 கோடி உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என கூற முடியாது. ஜூன் பொது குழுவில் ஜூலை  பொதுக்குழு அறிவிக்கப்பட்டதை ஓபிஎஸ் தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

கேட்கப்படாத நிவாரணம் தரப்பட்டது:

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தரப்புக்கு கேட்கப்படாத நிவாரணம் தரப்பட்டுள்ளது, இது அசாதாரணமானது. ஜூலை 23 க்கு முந்தய நிலையை நீடிக்கும் என ஓபிஎஸ்,  வைரமுத்து மனுக்களில் கோரிக்கை வைக்கவில்லை. பொதுக்குழு ஒப்புதல் அளிக்கும் வரை மட்டுமே ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட முடியும் என ஈபிஎஸ் தரப்பு தனது வாதங்களை வைத்து வருகின்றது.

Categories

Tech |