உலகின் பழம்பெரும் நடிகர் பார்த்திபனின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் பார்த்திபன்(90). இவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் சிவாஜி கணேசனுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்து பிரபலமானவர். மேலும் புதுமைப்பித்தன், வஞ்சிக்கோட்டை வாலிபன், கோழி கூவுது உள்ளிட்ட சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ராஜாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் என முதல்வர்களுடன் தொடர்பில் இருந்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.