தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக எந்த ஒரு அரசுதேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து கொரோனா முழுமையாக குறைந்ததால் வழக்கம்போல தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்2, 2ஏ தேர்வுகளை நடத்தி முடித்தது. இதனையடுத்து அடுத்த மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு ஜூன் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி வெளியிடுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in www.tnpscexams.இன் என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.