Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை… அதிரடி அறிவிப்பு..!!

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை காய்கறி மொத்த, சில்லறை வியாபாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் மே 17ஆம் தேதி முதல் அத்தியாவசிய பணிகளான திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளும் வெளியேயும் பயணிக்க இ- பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை காய்கறி மொத்த, சில்லரை வியாபாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பற்றி கண்டுகொள்ளாமல் மக்கள் அதிக அளவில் கூடியதால் திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்படுவதாகவும், மேலப்புலிவார்டு ரோடு காமராஜ் வளைவு முதல் வெல்லமண்டி சாலை சந்திப்பு வரை காய்கறிகள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |