திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து வேகமாக நடந்து ஜெயலலிதா ஆட்சி நிலவ பாடுபடவேண்டும். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன். என் மீது அன்பும், அக்கரையும் காட்டியே ஜெயலிதா தொண்டர்களுக்கு நன்றி.
ஜெயலலிதா மறைந்த பிறகும் அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக பணியாற்றுவேன். ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்ற வேண்டும். நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும் எனகூறி அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார்.