இனிமேல் குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களில் 2021 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டு வருகிறது. தங்களின் உறவினர்களிடம் நேரில் பார்த்து உறவாடி கொள்ளும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலம் ஆகவே பேசி உரையாடுகிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயலிகளை பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் ஐஓஎஸ் 9 மற்றும் ஆண்ட்ராய்டு 4.0.3 ஆகியவற்றுக்கு குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் 2021 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் இந்த இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் பயனர்கள் உடனடியாக தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இயங்குதளத்தை அப்டேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் தற்போதுள்ள இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.