ஆண்டுக்கு இரண்டு கோடி வரை முதல் இரண்டும் நிறுவனங்களைத் தவிர அனைத்து பதிவு தொழில் நிறுவனங்களுக்கும் 2020 2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி கணக்கை தாக்கல் செய்தாக வேண்டும். இதனை தவிர ஆண்டுக்கு 5 கோடிக்கு அதிகமாக முதல் ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் வரி கணக்குடன் ஜி எஸ் டி ஆர் 9 சி படிவத்தை தாக்கல் செய்தாக வேண்டும். வரி கணக்குகளை தணிக்கை செய்த பிறகு அந்த படிவத்தில் பட்டய கணக்காளர் சான்றொப்பமிடுவது கட்டாயமாக இருந்தது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஐந்து கோடிக்கும் அதிகமாக முதலீடும் அனைத்து நிறுவனங்களுக்கும் பட்டய கணக்காளரின் (ஆடிட்டர்) தணிக்கைச் சான்று கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆடிட்டர் சான்றோப்பத்துடன் கூடிய வடிவத்திற்கு பதிலாக சுய சான்றொப்பமிட்ட படிவத்தை தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வரி செலுத்துவோர் ஆயிரக்கணக்கானோர் நிம்மதி அடைவார்கள் என கூறியுள்ளது.