உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸால் 7 அறிகுறிகள் ஏற்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் தாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசை வலி, தோல் அரிப்பு உள்ளிட்ட 7 புதிய அறிகுறிகள் இருக்குமென தெரிவித்துள்ளது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த உருமாறிய வைரஸுக்கு சிகிச்சை அளிப்பது கடினம் என்றால், இறப்பு விகிதங்கள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய மாறுபாடுடன் இதுவரை பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளில் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.