கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்து உத்தரவிட்டுள்ளார். மேலும் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் m