Categories
மாநில செய்திகள்

FlashNews: கட்டண விலை குறைப்பு – தமிழக முதல்வர் ”மாஸ்”

சிறு, குறு & நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்திரை வரியிலிருந்து விலக்கு அளித்து பதிவு கட்டணத்தை குறைத்தும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் சலுகை 30 – 3 – 2021 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்தப் பதிவு கட்டணக் குறைப்பு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் சிறு – குறு – நடுத்தர தொழில் செய்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்,  தொழிலை இரட்டிப்பாகும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பு பல வகைகளில் பலன் அளிக்கும் என்றும், இதனால் பொருளாதாரத்தில் ஏற்றம் காண முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |