Categories
மாநில செய்திகள்

FlashNews: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000…. தமிழக அரசு புதிய அதிரடி…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தமிழக மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான பட்டியலில் குடிசை மற்றும் வீடுகளில் 2 மாதங்கள் சேர்த்து 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அதிக வருவாய் ஈட்ட வாய்ப்பில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Categories

Tech |