சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல மராத்தி நடிகர் கிஷோர் நந்தலஷ்கர் (81) உடல்நலக் குறைவால் காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இவர் மராத்தியில் miss you miss, taishi, hello gandhe sir ஆகிய படங்கள், இந்தியில் vaastav, singham, simmba உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.