நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார். வாரத்தின் ஆறு நாட்களும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி. திருமணங்கள், இறுதி சடங்குகளில் அதிகபட்சம் 20 பேருக்கு அனுமதி. சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகை நாட்களில் ஊரடங்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.