இந்தியாவில் உள்ள புதிய கார்களில் முன்பகுதியில் உள்ள இரு இருக்கைகளிலும் ஏர் பேக்குகளை உறுதி செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தற்போது விற்பனையில் உள்ள கார்களின் முன்பகுதியில் உள்ள இருக்கைகளிலும் ஏர்பேக்குகள் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Categories