தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குடுவெடிப்பு நடந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி இந்தியா கேட் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது டாக்டர் அப்துல்கலாம் சாலை. இந்த சாலையில்தான் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது. இந்த இடத்துக்கு அருகே சற்றுமுன் ஒரு வெடிகுண்டு வெடித்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள நான்கைந்து வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரு நபர் காயம் அடைந்து இருக்கிறார் என்று ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்து இருக்கிறது.
இதனால் உடனடியாக டெல்லி போலீசார் அந்த பகுதியில் உள்ள சாலைகளை மூடி, குண்டு வெடித்த இடத்திலேயே தற்போது ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தீயணைப்பு வாகனங்களையும் நிறுத்தி வைத்து, வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா ? ஒரு குண்டு வெடித்த நிலையில், வேறு ஏதேனும் அந்த பகுதியில் குண்டு வைக்கப்பட்டுள்ளதா ? இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்று தற்போது விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.